தேவைப்பட்டால் பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்போம்: காங்கிரஸ் அறிவிப்பு
ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கூறி வரும் நிலையில் தேர்தலுக்குப்பின் தேவைப்பட்டால் பிற கட்சித் தலைவர் பிரதமர் ஆக காங்கிரஸ் ஆதரவு தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணியை பதவிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்கள் லட்சியம் என்றும், காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் தான் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.