ஏசி எந்திர விபத்தா? கூலிப்படை சதியா? திடுக்கிடும் தகவல்
சமீபத்தில் திண்டிவனத்தில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் உயிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தியதில் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறில் 3 பேரும் கூலிப் படை மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் வசித்த ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகிய மூவரும் சமீபத்தில் ஏசி எந்திரம் வெடித்ததால் பலியானதாக கூறப்பட்டது