பணத்திற்கும் உண்மைக்கும் இடையே போட்டி: ராகுல்காந்தி
பணத்திற்கும் உண்மைக்கும் இடையே போட்டி: ராகுல்காந்திபாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் இடையே தான் போட்டி என்றும், அதுதான் இந்த தேர்தல் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பல்வேறு விவகாரங்களில் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை என்றும், தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பண பலத்தை பயன்படுத்தி உள்ளனர் என்றும், மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும் என்றும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன், எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தினோம் என்றும் ராகுல் காந்தி கூறினார்.