கடவுளை விட கோட்சேவைத்தான் பாஜக விரும்புகிறது: ராகுல்காந்தி
கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறியதை அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்த்து வருகின்றனர். பிரதமர் மோடியும் பிரக்யாசிங் கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தனது டுவிட்டரில், ‘ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை என்றும், கடவுளை விட கோட்சேவை தான் அதிகம் விரும்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
I finally got it. The BJP and the RSS…
Are not God-Ke Lovers.
They are God-Se Lovers.
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2019