20 லட்சம் பணம் எடுத்து வந்தாரா ஆரணி எம்பி?
டெல்லியில் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் எடுத்து வந்ததாக ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் சென்னை விமானநிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலை டெல்லியில் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் எடுத்து வந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.