சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றம்

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றம்

சென்னையில் தற்போது தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது சொந்த பணத்தில் தண்ணீர் லாரி ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘மக்கள் தலைவரின் கனவான தண்ணீர் பஞ்சமில்லா தமிழகத்தை உருவாக்கும் கள பணியில் 5வது நாளாக வட சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு தினமும் 128000 லிட்டர் தண்ணீர் (4 லாரிகள்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இருமடங்காக அதிகரிக்கப்பட்ட உள்ளது’ என்று கூறினார்.

மக்களின் உணர்வுகளை தூண்டி வரும் வகையில் தீவிரவாத பேச்சுக்களை பேசி வரும் அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் நன்மையை செயலில் செய்து வரும் ரஜினி மக்கள் மன்றத்தினர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது

Leave a Reply