எக்சிட்போல் கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போது எக்சிட்போல் முடிவுகளை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
இதன்படி பெரும்பாலான எக்சிட்போல் முடிவுகள் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைக்காமல் பிரித்துவிட்டதால் தான் மீண்டும் பாஜக ஆட்சி என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி 25க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 10க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.,