தேர்தல் தோல்வி எதிரொலி: பிரபல காங்கிரஸ் பிரமுகர் ராஜினாமா
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் ஒருசில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தியே ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது