ராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது: ரந்தீப் சுர்ஜிவாலா
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ரந்தீப் சுர்ஜிவாலா, ‘காங்கிரசில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்ய கட்சித் தலைவர் ராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வரவேண்டும் என்றும் ரந்தீப் சுர்ஜிவாலா கேட்டுக்கொண்டுள்ளார்.