ராகுல் கருத்தின் பொருள் தற்போதுதான் விளங்குகிறது: ஸ்மிருதி இரானி
அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ராகுல் காந்தி கூறியதன் உண்மையான அர்த்தம் தனக்கு தற்போது தான் தெரிவதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அமேதி தொகுதியில் ஸ்மிருதியின் வெற்றிக்கு பாடுபட்ட பிரச்சார உதவியாளரும் முன்னாள் கிராமத் தலைவருமான சுரேந்திரசிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சுரேந்திரசிங் கொலையின் மூலம் அமேதியை பயங்கரவாதப் பகுதியாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், அதற்கு இடம் கொடுத்துவிடாமல் பா.ஜ.க.வினர் அமைதிகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமேதியை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ராகுல் கருத்தின் பொருள் தனக்கு தற்போதுதான் விளங்குவதாகவும் அவர் கூறினார்.