தாயின் உயிரை காப்பாற்ற பிச்சை எடுக்கும் 6 வயது மகள்

தாயின் உயிரை காப்பாற்ற பிச்சை எடுக்கும் 6 வயது மகள்

கர்நாடகா மாநிலத்தில் உடல்நலமின்றி உயிருக்காக போராடி வரும் தாயின் உயிரை காப்பாற்ற அவரது 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கொப்பல் என்ற பகுதியை சேர்ந்த துர்க்காம்மா என்பவரின் கணவர் இன்னொரு பெண்ணுடன் சென்று விட தனது 6 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென துர்க்காம்மா உடல்நலமின்றி போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துர்க்காம்மாவுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் வாங்குகுவதற்காக அவரது 6 வயது மகள் பாக்கியலட்சுமி அந்த மருத்துவமனையில் உள்ள சாலையில் பிச்சை எடுத்து வருவதாகவும், அதில் கிடைக்கும் பணத்தில் தனது தாய்க்கு உணவு வாங்கிக் கொடுப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக பிச்சை எடுத்து வந்த சிறுமியை மீட்ட அதிகாரிகள் துர்க்காம்மாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தேவையான உதவிகளும் செய்வதாக் கூறி சிறுமியை தற்காலிகமாக காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply