ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவராக தொடருங்கள் என்றும், தலைவர் பதவியைவிட்டு விலகவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலக வேண்டிய அவசியம் இல்லை என சற்றுமுன் ரஜினிகாந்த் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply