மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள்! அதிமுக பெயர் லிஸ்ட்டில் மிஸ்
மத்திய அமைச்சரவையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ள நிலையில் இந்த லிஸ்ட்டில் அதிமுக பெயர் மிஸ் ஆகியுள்ளதால் அதிமுக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சற்றுமுன் மத்திய அமைச்சரவையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே இடமுண்டு என்று செய்தி வெளியாகியுள்ளது