தமிழக அரசுப்பணிகள் 100% தமிழர்களுக்கு மட்டுமே! வைகோ

தமிழக அரசுப்பணிகள் 100% தமிழர்களுக்கு மட்டுமே! வைகோ

மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் தேர்வில் வெளி மாநிலத்தவர்களை தேர்வுசெய்திருப்பது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசுப்பணிகள் மற்றும் மத்தியஅரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% பணிவாய்ப்பு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.,

Leave a Reply