இந்த இளைஞருக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கலாமே!
படத்தில் தோன்றும் இந்த இளைஞர் சமீபத்தில் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தின் வெளியே ஒரு சிறுமி பசியுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். உடனே அந்த சிறுமியை அணுகிய இளைஞர் ‘உனக்கு பசிக்கின்றதா? என்று கேட்க அந்த சிறுமி ‘ஆம்’ என்று கூறியுள்ளார்.
உடனே அந்த சிறுமியை தன்னுடன் உணவகத்திற்கு அழைத்து சென்று தனது அருகில் உட்கார வைத்து அந்த சிறுமிக்கு கேட்ட நூடுல்ஸை வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அந்த சிறுமி அந்த உணவை சாப்பிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு சிறுமியின் பசியை போக்கிய அந்த இளைஞர் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துவோமா?