குழந்தை பிறந்த சில நிமிடங்களில் கழிவறையில் வீசிச்சென்ற கொடூர தாய்!

குழந்தை பிறந்த சில நிமிடங்களில் கழிவறையில் வீசிச்சென்ற கொடூர தாய்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை கழிவறையில் தாயே வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திடீரென அந்த குழந்தையை மருத்துவமனையின் கழிவறையில் போட்டுவிட்டு அந்த பெண் தப்பிச் சென்றுவிட்டார். குழந்தையின் அழுகுரல் கேட்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு முதலுதவி அளித்தனர். பெற்ற குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply