குடும்பசூழலை அரசியலாக்குவதா? தமிழிசை கண்டனம்

குடும்பசூழலை அரசியலாக்குவதா? தமிழிசை கண்டனம்

நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது திடீரென வந்த அவரது மகன் சுகநாதன், ‘பாஜக ஒழிக’ என்று கோஷமிட்டார். இந்த சம்பவத்தை ஒருசில ஊடகங்கள் பெரிதாக்கிய நிலையில் இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான், என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்… சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை.

இவ்வாறு தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply