அதிமுக கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை: அதிருப்தி தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரத்தினசபாபதி எம்.எல்.ஏ, ‘தற்போது அமமுகவில் இல்லை என்று கூறியபிறகும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்று கூறினார்.
முன்னதாக ஒற்றைத்தலைமை வேண்டும் என்று குரல் கொடுத்த குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அழைப்பு விடுவித்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது