அதிமுக கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு இல்லை: பிரபு எம்எல்ஏ
அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரபு எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர் என்றும் ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை என்றும் பிரபு எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு இல்லை என அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்றும், ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்றும் கலைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கலைச்செல்வன், பிரபு மற்றும் ரத்தினசபாபதி ஆகிய மூவரும் தினகரன் ஆதரவாளர்கள் என அதிமுக தலைமையால் முத்திரை குத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது