எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு
ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான் நாடு தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
நார்வே நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பிரெண்ட் அட்லெயர் என்றா ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கோகுலா, கராஜியஸ் ஆகிய ஆகிய 2 எண்ணெய்க் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் நேற்று தாக்குதலுக்கு உள்ளாகின. பெரும் புகைமூட்டத்துடன் பற்றி எரிந்த அந்த எண்ணெய் கப்பல்களில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே பொறுப்பு என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், இத்தகைய தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு தேவைப்படும் திறன், கப்பல்கள் மீது ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஈரானே தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாக முடிவுக்கு வரவேண்டியுள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.