நயன்தாராவுக்கு அங்கிளுக்கு நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு அங்கிளுக்கு நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் வாய்ப்பு கேட்டுள்ளார்.
கமாண்டோ, பிரிடேட்டர், எக்ஸ் மென் போன்ற ஆங்கில நடித்த பில் டியூக். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவுக்கு அங்கிளாகவோ நடிக்க தயார். அனிருத் எனக்காக ஒரு சூப்பர் பாட்டு போட்டு கொடுப்பார். எனக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா? என ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்டுள்ளார். இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த முருகதாஸ், ”உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? என்று தனது டுவிட்டரில் கேட்டுள்ளார்.
இதனையடுத்து ‘தர்பார்’ படத்தின் கதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு நயன்தாராவின் அமெரிக்க உறவினராக பில் டியூக் நடிக்க முருகதாஸ் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்