மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
17-வது மக்களவையின் சபாநாயகராக, பாஜகவின் ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார். அவருக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்தன
சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லா அவர்களுகு பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மக்களவையின் மரபுப்படி சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை இருவரும் இணைந்து அமர வைத்தனர்.
முன்னதாக ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார்