பகலில் தண்ணீர் இல்லை, இரவில் கரண்ட் இல்லை: வாழ தகுதியற்ற நகரமாகும் சென்னை!
கிராமங்களில், சிறிய நகரங்களில் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், கடனாளிகள் அனைவரும் சென்னைக்கு சென்றால் பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தலைநகரில் குவிய தொடங்கினர். அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை மிக அதிகமானது
ஆனால் அதற்கேற்ப தண்ணீர் மற்றும் மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் பகலில் தண்ணீருக்காக அலைந்து திரிகின்றனர். இரவில் பலமணி நேரம் மின்வெட்டு இருப்பதால் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இப்படியே போனால் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக சென்னை மாறிவிடும் அபாயம் இல்லை. வெளியூர்க்காரர்கள் அனைவரும் அவரவர் ஊருக்கு திரும்பிவிட்டால் சென்னையின் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.