மக்கள் நீதி மய்யம் அவ்வளவுதானா? கமல் மீது கட்சியினர் அதிருப்தி
கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
இந்த நிலையில் இதற்கு மேலும் கட்சி தேறாது என்று முடிவு செய்துவிட்ட கமல், தற்போது மீண்டும் சினிமா, பிக்பாஸ் என கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம்
கட்சியினர்களை சந்திக்க மறுப்பதாகவும், அரசியலை பாதியில் விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கப் போய்விட்டார் என்றும் கட்சியினர் குமுறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது உண்மையா? வதந்தியா? என்பதை கமல் அல்லது அவரது கட்சியினர் தான் விளக்க வேண்டும்