என்னென்ன தவறுக்கு எவ்வளவு அபராதம்? போக்குவரத்து துறை கடுமையாகிறது

என்னென்ன தவறுக்கு எவ்வளவு அபராதம்? போக்குவரத்து துறை கடுமையாகிறது

போக்குவரத்து விதிகளை கடுமையாக கடைபிடிக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை அடுத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இனிமேல் பர்ஸ் காலியாகிவிடும் அளவுக்கு அபாரதம் விதிக்கப்படும் என தெரிகிறது

என்னென்ன விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம் என பார்ப்போமா!

ஹெல்மெட் போடாவிட்டால் ரூ.1000 அபராதம்

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை

அதிக வேகத்தில் சென்றால் ரூ.1000 ஆயிரம் அபராதம்

சிக்னலில் சிவப்புவிளக்கு எரியும் போது நிற்காமல் வாகனத்தை இயக்கினால் ரூ.1000 ரூபாய் அபராதம்

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்

இதுகுறித்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply