சாட்டிலைட் புகைப்படங்கள் உதவியுடன் காக்கப்படும் அமேசான் காடுகள்
அமேசானில் உள்ள மழைக்காடுகளை காப்பாற்ற சாட்டிலைட் புகைப்படங்கள் மிகவும் உதவிகரமாக இருப்பதாக நார்வே நாடு தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் மழைகாடுகள் அமைந்துள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்த மழைக்காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், அமேசான் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. அமேசான் மழைக்காடுகளை பாதுகாக்க நார்வே அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க சேட்டிலைட் புகைப்படங்கள் உதவிகரமாக இருப்பதாகவும், அதன் மூலம் காடுகள் அழிப்பு தடுக்கப்பட்டு வருவதாகவும் நார்வே தெரிவித்துள்ளது. பிரேசில் பகுதியில் உள்ள அமேசான் காடுகளே அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அமேசான் மழைக்காடுகளை பாதுக்காக்க நார்வே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.