கேப்மாரி’ தான் என்னோட கடைசி: விஜய் தந்தை பேட்டி
‘கேப்மாரி’ தான், தமது கடைசி படம் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம்’ என்றும், இந்த படத்துடன் ஓய்வு பெறுவதாகவும் கூறினார்.
இதுவரை எஸ்.ஏ.சந்திரசேகர், 69 படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டிராபிக் ராமசாமி உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடங்களிலும், அவர் இயக்கிய பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்