மது உணவுப்பொருளா? என நீதிபதியிடம் கேள்வி கேட்ட பெண் மீது அவமதிப்பு வழக்கு!

மது உணவுப்பொருளா? என நீதிபதியிடம் கேள்வி கேட்ட பெண் மீது அவமதிப்பு வழக்கு!

கடந்த பல ஆண்டுகளாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நந்தினி என்ற இளம்பெண் நடத்தி வருவது தெரிந்ததே

இந்த நிலையில் மது விலக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நந்தினி, நீதிமன்றத்தில் வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை எழுப்பியதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம், ‘மதுபானம் உணவுப் பொருளா? ‘ என்று நந்தினி கேள்வி கேட்டார்.

வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply