திண்டுக்கல் ஐ லியோனி தனியார் மருத்துவமனையில் அனுமதி
திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி உடல்நலக்குறைவால் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி, கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், 2014ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.