இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா ராஜினாமா
இயக்குநர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியதாவது:
கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில் நமது சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், இணை-துணை இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகியால் ஜனநயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டலும் பேரன்பும் என்றும் தொடரும்’ என்று பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.