‘பிகில்’ படத்தில் ஷாருக்கான் நடிப்பது உண்மையா?

‘பிகில்’ படத்தில் ஷாருக்கான் நடிப்பது உண்மையா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஏற்கனவே ஒரு வதந்தி கிளம்பி அதன்பின் அது உண்மையில்லை என படக்குழுவினர்களால் மறுக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் மீடியாக்களில் ‘பிகில்’ படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவர் ‘பிகில்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக ஷாருக்கான் இந்த படத்தில் டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தகவலை ஷாருக்கான் தரப்பும், ‘பிகில்’ படக்குழுவினர்களும் உறுதி செய்யாததால், உறுதி செய்யப்படும் வரை இது வதந்தியாகவே கருதப்படும்

Leave a Reply