உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து முதல் அரையிறுதியிலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாம் அரையிறுதியிலும் மோதுகின்றன. இந்த இரு அரையிறுதி போட்டிகள் ஜூலை 9 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரு அரையிறுதியிலும் வெல்லும் அணிகள் ஜூலை 14ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப்போட்டியிலும் மோதும்
முன்னதாக கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது