சாஹோ-கோமாளி ஒரே நாளில் ரிலீஸ்

சாஹோ-கோமாளி ஒரே நாளில் ரிலீஸ்

இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

கோமாளி ஹீரோ ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று நேற்று அறிவித்துள்ளார்,. ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை என்பதால் தொடர் விடுமுறை நாளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

Leave a Reply