அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இப்படி ஒரு நிலையா? கனிமொழி வேதனை

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு இப்படி ஒரு நிலையா? கனிமொழி வேதனை

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைத்த ஒரு பொக்கிஷமாக காணப்படுகிறது. ஆனால் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் தமிழக அரசு இந்த நூலகத்தை சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பத்திரிகை செய்திகளும் அவ்வப்போது வருவதுண்டு

இந்த நிலையில் இந்த நூலகம் சரியாக பராமரிக்கப்படாதது குறித்து கனிமொழி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட பின்னரும், அந்நூலகம், பராமரிப்பின்றி இருக்கிறது என்று, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அரசு உடனடியாக தலையிட்டு, நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கனிமொழி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply