சூர்யா அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கின்றாரா?

சூர்யா அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கின்றாரா?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா, பிரதமரின் மெய்க்காப்பாளர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

ஆனால் சூர்யாவின் கேரக்டரில் வில்லத்தனம் இருக்கும் என்றும், சூர்யாவின் கேரக்டர் மட்டுமின்றி மோகன்லால், ஆர்யா, சாயிஷா கேரக்டர்களிலும் இரட்டை முகம் இருக்கும் என்றும் இந்த படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யா, ’24’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நிலையில் அவர் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் ‘காப்பான்’ படமாக இருக்கும் என கருதப்படுகிறது

Leave a Reply