ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை

ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்’- போக்குவரத்து துறை

பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ராபிடோ ஆப் மூலம் பயணம் செய்த 37 வாகனங்களை போக்குவரத்து துறை பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வாடகை கார், ஆட்டோ போல, ‘ராபிடோ’ எனும் மொபைல் செயலி மூலம், இருசக்கர வாகனங்களில், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து, அழைத்துச் செல்லும் தொழில், சென்னையில் பரவலாக நடந்து வருகிறது.

தனி நபர் செல்லும் இருசக்கர வாகனத்தில், வாடிக்கையாளரை ஏற்றுவது சட்டத்திற்கும், போக்குவரத்து விதிமுறைக்கும் புறம்பானது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கண்காணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply