தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா
தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சமீபத்தில் சில நபர்களை கைது செய்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் கைது செய்யப்பட்ட இந்த நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கைது குறித்து எந்த அரசியல்வாதியும் இதுவரை வாய் திறந்து கருத்து தெரிவிக்கவில்லை
இந்த நிலையில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் எம்பியுமான ஆ ராசா இதுகுறித்து கூறியபோது ‘தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை மதக்கண்ணோட்டத்தோடு அரசு அணுகக்கூடாது. முந்தைய அரசுக்கு இருந்த அரசியல் அடையாளம் வேறு, இப்போது உள்ள அரசுக்கு இருக்கும் அடையாளம் வேறு. எனவே இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்ப டும் என்ற அச்சம் இப்போது பலருக்கும் இருக்கின்றது. அதை களைய வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்