முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். வயிற்றெரிச்சலில் ஸ்டாலின்
சமீபத்தில் முன்னேறிய வகுப்பினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்ற மசோதாவை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் ஆதரவு தந்தது. ஆனால் வழக்கம்போல் திமுக இதனை கடுமையாக எதிர்த்தது
இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ஸ்டேட் வங்கியின் தேர்வு முடிவில் முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற செய்தி வெளிவந்துள்ளது
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது.
10% இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க என்று பதிவு செய்துள்ளார்.
ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம்.
பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது.#10percentreservation ஐ உடனடியாக ரத்து செய்க! pic.twitter.com/1DPexec2Yr
— M.K.Stalin (@mkstalin) July 24, 2019