வேலூர் தேர்தல்: துணை முதல்வரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த அறிக்கை ஒன்றை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது
இதன்படி ஜூலை 29 ஆம் தேதி ஒடுகத்தூர் பேரூராட்சிகளிலும் லத்தேரி பகுதியிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்
அதேபோல் ஜூலை 30-ஆம் தேதி குடியாத்தம் தொகுதி பேரணாம்பட்டு நகரத்திலும் வேலூர் நகரத்திலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார்
ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆலங்காயம் பகுதியிலும் ஆம்பூர் நகர பகுதிகளிலும் துணைமுதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது