2 மாத சிங்கக்குட்டியை காப்பாற்றிய வன அதிகாரிகள்
குஜராத் காடு ஒன்றில் தனியாக தவித்துக் கொண்டிருந்த இரண்டு மாத சிங்கக்குட்டியை வன அதிகாரிகள் காப்பாற்றி தேசிய பூங்காவில் வளர்த்துவருகின்றனர்
குஜராத் மாநிலத்தில் உள்ள காடு ஒன்றில் இரண்டு மாத சிங்கக்குட்டி ஒன்று எந்தவித துணையும் இல்லாமல் தனியாக தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள காட்டுவாசிகள் இதை பார்த்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்
உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அந்த இரண்டு மாத சிங்கக்குட்டியை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளித்தனர் .அதன் பின்னர் குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற கிர் தேசிய பூங்காவில் அந்தச் சிங்கக் குட்டியை ஒப்படைத்தனர்
தற்போது அந்த பூங்காவில் சிங்கக்குட்டி மற்ற சிங்கங்களுடன் இணைந்து வளர்ந்து வருகின்றது. இந்த சிங்கக்குட்டியை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது