மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடை மசோதா! அதிமுக மறைமுக ஆதரவா?
பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய முத்தலாக் மசோதா சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் குரல் ஒட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதை அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் முத்தலாக் தடைச்சட்டம் அமலுக்கு வரும்
மக்களவையில் முத்தலாக் மசோதாவை அதிமுக ஆதரித்த நிலையில் மாநிலங்களவையில் அதற்கு எதிர்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியபோது, ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், ‘முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.