காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவா?
காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் காஷ்மீர் மாநிலம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்முவை தனி மாநிலமாக பிரிக்கவும், அதனையடுத்து லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதுகுறித்த முறையான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை மத்திய அரசோ, காஷ்மீர் அரசோ உறுதி செய்யவில்லை என்றும், இது ஒரு வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறபடுகிறது.