பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.
ஆதார் எண் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆதார் எண்களை பதிவதற்கு மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
மேலும் மாணவர்களின் ஆதார் எண் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளடு