ஒரு கல்லூரி மாணவரின் சாட்டையடி மெசேஜ்

ஒரு கல்லூரி மாணவரின் சாட்டையடி மெசேஜ்

இருபது வருடங்களுக்கு முன் தண்ணீரை யாரும் விலை கொடுத்து வாங்கியது இல்லை. ஆனால் இன்று கிட்டத்தட்ட அனைவருமே கேன்வாட்டர் என்ற பெயரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளோம்

இதேபோல் ஒரு காலத்தில் சுவாசிக்க ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். எனவே இப்போது முதலே கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடும் மரங்களை வளர்க்க வேண்டும்

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆக்சிஜனை தனது மூக்கில் வைத்து கொண்டு ஒரு மெசேஜையும் கழுத்தில் கட்டிக்கொண்டு வருவோர் போவோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கூறுவதை புரிந்து கொள்ளாவிட்டால் இன்னும் இருபது வருடங்களில் அனைவரும் சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்

Leave a Reply