சபாநாயகர் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம்
தமிழக சட்டமன்ற சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பின்னர் பின்வாங்கிய நிலையில் தற்போது புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு அந்துள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து, நடுநிலையுடன் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி உள்ளதை அடுத்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத்தில் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 3 திமுக எம்.எல்.ஏக்கள் ஆளும் தரப்பிலும், பாஜக, அதிமுக உள்பட எதிர்தரப்பில் 15 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். மேலும் 3 நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அவர்களுடைய வாக்குகளை பொறுத்தே இந்த தீர்மானம் வெற்றியா? தோல்வியா? என்பது முடிவு செய்யப்படும்.