என் மீது யாரும் கரன்சியை வீசி எறியவில்லை: திருமாவளவன் விளக்கம்
சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் லண்டன் சென்றிருந்த போது அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இலங்கை இலங்கை தமிழர் ஒருவர் திருமாவளவன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி வைத்தது பணத்திற்காகவும் பதவிக்காகவும் என்றும் கடுமையாகப் பேசி, பணம் தான் உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என பணத்தை அவர் மீது வீசி எறிந்ததாகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
இது குறித்து விளக்கமளித்த திருமாவளவன் கூறியதாவது: என் மீது யாரும் கரன்சியை வீசி எறியவில்லை, லண்டனில் கடைசி இருக்கையில் இருந்தவர் திமுக கூட்டணியில் இடம் பெற்றது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் அவர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார் என்று கூறினார்