செப்டம்பர் முழுவதும் பிகில் அப்டேட்: தயாரிப்பாளர் உறுதி
தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் முழுவதும் ‘பிகில் படத்தின் அப்டேட்கள் தினமும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் என பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் வெறித்தனம் பாடல் குறித்த அப்டேட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.