முதுநிலை பொறியியல் படிப்பு: கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3129 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது
டான்செட் அல்லது கேட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வில் கலந்துகொள்ள பதிவு செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 22-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மொத்தம் உள்ள 16,728 முதுநிலை பொறியியல் இடங்களில் சேர 6,728 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
16,728 இடங்களுக்கு கடந்த 27 முதல் இன்று வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. தரவரிசைப்பட்டியல் படி, கலந்தாய்வில் பங்கேற்க 5,083 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 3,129 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. 1,750 பேர் அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 204 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டும், இடங்களை தேர்வு செய்யாமல் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது