அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக நாளை முதல் அதாவது செப்டம்பர் 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2500 பணி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து செய்திருப்பது விண்ணப்பதாரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு ஆணை ரத்து செய்யப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்த பின்னர் வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது