சென்னை – ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து: ரஷ்யாவில் பிரதமர் மோடி அறிவிப்பு
ரஷ்யாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, ‘சென்னை – ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரஷ்யாவுடனான இந்திய உறவு காலம் காலமாக வலுப்படுத்தப்பட்ட ஒன்று என்று கூறிய மோடி, இரு நாடுகளிடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், இதனால் அரசு மற்றும் தனியார் துறை இரு நாடுகளின் உறவை பலப்படுத்தி உள்ளதகவும் தெரிவித்தார்.
மேலும் ஏ.கே-203 துப்பாக்கி இருநாடுகளும் இணைந்து தயாரிக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, ரஷ்ய உதவியுடன் விண்வெளியில் புதிய உச்சத்தை இந்தியா எட்டும் என்றும் தெரிவித்தார்.